Home Featured தமிழ் நாடு ‘மக்களிடம் கலந்துரையாடல்’ சுற்றுப்பயணத்தை தொடங்கினார் அன்புமணி ராமதாஸ்!

‘மக்களிடம் கலந்துரையாடல்’ சுற்றுப்பயணத்தை தொடங்கினார் அன்புமணி ராமதாஸ்!

622
0
SHARE
Ad

anbumani-ramadossதூத்துக்குடி – பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், மக்களுடன் கலந்துரையாட முடிவு செய்துள்ளார். இதற்காக தமிழகத்தின்அனைத்து மாவட்டங்களுக்கும் ‘‘உங்கள் ஊர்… உங்கள் அன்புமணி’’ என்ற தலைப்பில் அவர் 11 நாட்களுக்கு மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தை தூத்துக்குடியில் இன்று தொடங்கினார். தூத்துக்குடி மணிநகரில் உள்ள சந்திராமகாலுக்கு சென்ற அன்புமணி அங்கு பொதுமக்களுடன் மாவட்ட பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பிரச்சினைகள் குறித்து மக்களுடன் அன்புமணி விவாதிக்கிறார்.

#TamilSchoolmychoice