லண்டன் – இங்கிலாந்தில் கிழக்கு ஏங்கிலா பல்கலைக் கழகம் மற்றும் ஹல்பல்கலைக் கழக நிபுணர்கள் இணைந்து ‘சிக்லிட்’ இன வகை மீனில் கலப்பின பெருக்கம் செய்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒரு பெண் மீன் ஆண் மீனின் இனப்பெருக்க உறுப்புகளுடன் பிறந்தது.
அந்த மீன் வளர்ந்தவுடன் அதன் உடலில் இருந்து கருமுட்டைகளும், விந்தணுவும் உருவாகின. குறிப்பிட்ட பருவம் வந்ததும் அந்த மீன் தனது உடலில் இருந்து விந்தணுவை வெளியேற்றுகிறது. பின்னர் அதை தானே சாப்பிட்டது. இதன் மூலம் அதன் கருமுட்டைகள் குட்டிகளாகி ஈன்றது.
இந்த மீன் 42 குஞ்சுகளை பொறித்துள்ளது. அவற்றில் ஆண் மற்றும் பெண் மீன் குஞ்சுகள் அடங்கும். முதுகெலும்புள்ள உயிரினங்களில் இது போன்ற அதிசயம் எப்போதாவது ஒரு முறை தான் நிகழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மீனை ‘செல்பிங்’ என அழைக்கின்றனர்.