நெல்லை – வைகோவுக்கு அனுப்பிய மனுவை தி.மு.க. தலைவர் கருணாநிதி திரும்ப பெற வேண்டும் என்று பிரேமலதா கூறினார். நெல்லையில் நேற்று இரவு தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா கலந்து கொண்டு பேசும்போது, மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க முன்வந்து சந்தித்து பேசினார்கள். நல்ல கூட்டணி தற்போது அமைந்து இருக்கிறது.
தே.மு.தி.க. தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தருவோம், விளையாட்டு துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அற்ற ஆட்சியை கொண்டு வர தே.மு.தி.க. தலைமையிலான கூட்டணி பாடுபடும். மேலும், தி.மு.க., அதிமுக., கட்சிகளுக்கு மாற்றாக தே.மு..தி.க., திகழும்.
செய்தித்தாள்களில் வெளியான செய்தியை பேசிய வைகோவுக்கு அனுப்பப்பட்ட மனுவை தி.மு.க., தலைவர் கருணாநிதி திரும்ப பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் பிரேமலதா.