Home Featured கலையுலகம் ரசிகர்கள் வைத்த பேனரால் ரஜினிக்கு வந்திருக்கும் சிக்கல்!

ரசிகர்கள் வைத்த பேனரால் ரஜினிக்கு வந்திருக்கும் சிக்கல்!

931
0
SHARE
Ad

rajiniபெங்களூரு – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் வெளியாகும் சமயங்களில், ரசிகர்கள் அவருக்கு பிரம்மாண்ட பேனர்கள் கட்டுவது, கட்அவுட்கள் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது வாடிக்கை தான்.

ஆனால் ரசிகர்களின் இது போன்ற செயல்கள் தற்போது ரஜினிகாந்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரஜினிகாந்திற்கு பெங்களூரு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ரசிகர்களின் இந்தச் செயல்களால் பாதிக்கப்பட்ட மணிமாறன் என்பவர் பொதுநல மனு ஒன்றை பெங்களூரு மேயால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பேனர் வைப்பதுடன், பால் அபிஷேகம் செய்வதாகவும், அந்த பணத்தை ஏழைகளின் நலனுக்கு செலவிட உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த பெங்களூரு மேயால் நீதிமன்றம் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.