Home Featured நாடு புரோட்டோன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மகாதீர்!

புரோட்டோன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மகாதீர்!

580
0
SHARE
Ad

Dr Mahathirகோலாலம்பூர் – புரோட்டோன் ஹோல்டிங்க்ஸ் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்.

இன்று அவரது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை அறிக்கையில், நேற்று தனது ராஜினாமா கடிதத்தை டிஆர்பி – ஹைகாம் பெர்காட் (DRB-HICOM Berhad) குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சையத் பைசல் அல்பாருக்கு, மகாதீர் அனுப்பி விட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அதோடு, நேற்று மார்ச் 30-ம் தேதி, பெட்ரோனாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (Universiti Teknologi Petronas) தலைவர் பதவியிலிருந்தும் அவர் விலகி விட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும், லங்காவி மேம்பாட்டு அதிகார சபை (Langkawi Development Authority) மற்றும் தியோமான் தீவு மேம்பாட்டு அதிகார சபை (Tioman Island Development Authority) ஆகியவற்றின் ஆலோசகர் பதவியிலிருந்தும் மகாதீர் விலகிவிட்டதாகக் கூறப்படுகின்றது.

பிரதமருக்கு எதிராக மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டதால், அண்மையில் பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து மகாதீர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.