அவர் கடந்த வாரம் இந்த இல்லம் விற்பனை தொடர்பில் வெளியிட்ட சத்தியப் பிரமாணத்தில் பொய் சொல்லியதாக அவருக்கு எதிராக 10 புகார்கள் காவல்துறைக்கு வந்துள்ளதையடுத்து, அவர் எதிராக இந்த விசாரணையை நடத்துகிறது காவல்துறை.
இது குறித்து பினாங்கு காவல்துறைத் தலைவர் அப்துல் காபர் வாஹாப் செய்தியாளர்களிடம் கூறுகையில், சத்தியப் பிரமாணத்தை வாங்கிய ஆணையர், அரசு அதிகாரிகள் உட்பட 4 பேர் விசாரணை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பாங்கிடம் இன்று வாக்குமூலம் பெற்ற பின்னர் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் விசாரணை செய்யப்படுவார் என்றும் அப்துல் காபர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பாங் வெளியிட்ட சத்தியப் பிரமாணத்தில் தனக்கும், மாநில அரசாங்கத்திற்கு இடையே எந்த ஒரு வர்த்தகத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் மாநில அரசாங்கத்தின் பினாங்கு முதலீடு (InvestPenang) இணையதளத்தில் மாநில அரசாங்கத்துடன் வர்த்தகத் தொடர்புடையவர்களின் பட்டியலில் பாங்கின் பெயர் உள்ளதாக பினாங்கு அம்னோ இளைஞர் பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளது.