Home இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அஞ்சுகிறதா?

இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அஞ்சுகிறதா?

585
0
SHARE
Ad

Jayalalitha-Slider--1சென்னை, மார்ச்.15-இலங்கையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு  எதிராக இந்திய மத்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாதிருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா  மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கம் இது தொடர்பில் தொடர்ந்தும் மௌனமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் கொழும்பு அரசாங்கத்துக்கு இந்தியா அஞ்சுகிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்கள் சூறையாடப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.எனவே இந்திய மத்திய அரசாங்கம் இதற்கு தீர்க்கமான நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.