Home உலகம் எந்தப் பிரச்சினையானாலும் பேச்சு வார்த்தை மூலம் தேர்வு காணலாம் – மகிந்த ராஜபக்சே கருத்து

எந்தப் பிரச்சினையானாலும் பேச்சு வார்த்தை மூலம் தேர்வு காணலாம் – மகிந்த ராஜபக்சே கருத்து

508
0
SHARE
Ad

Rajapakse-Sliderஇலங்கை, மார்ச் 15 – இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜப்பானிடம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையில் காணப்படும் முறுகல் நிலையை தணிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ஜப்பானுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜப்பானுக்கான பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்று ஜப்பானின் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்பொழுது சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பிரச்சினையாக காணப்படும் சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள தீவு தொடர்பில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். எந்த பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தையே தீர்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.