Home இந்தியா சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்

516
0
SHARE
Ad
சென்னை, மார்ச் 15-இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று முதல் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். போராட்டத்தை வேறு வடிவத்தில் எடுத்துச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.