Home 13வது பொதுத் தேர்தல் வரும் பொதுத்தேர்தலில் ஜ.செ.க. தலைவர் லிம் கிட் சியாங் ஜோகூரில் போட்டியிடுவாரா?

வரும் பொதுத்தேர்தலில் ஜ.செ.க. தலைவர் லிம் கிட் சியாங் ஜோகூரில் போட்டியிடுவாரா?

643
0
SHARE
Ad

Lim-Kit-Siang-Sliderஜோகூர்,மார்ச்.15-  ஜ.செ.க. தலைவர் லிம் கிட் சியாங் வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து  ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினரான லிம், திங்கள்கிழமை ஜோகூர் பாருவுக்கு அருகில் ஸ்கூடாயில் ஜ.செ.க.வின் 47-வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் செய்வார் எனத் தெரிகிறது.

ஜோகூர் பாருவுக்கு அருகில் உள்ள அத்தொகுதி 54 விழுக்காடு சீன வாக்காளர்களையும் 34 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும் 12 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் கொண்டது. ஆனாலும், அங்குள்ள சீனர்கள் தேசிய முன்னணிக்கு எதிர்ப்பான போக்கைக் கொண்டிருப்பதால் அதனை வெற்றிக்கொள்ள முடியும் என்றே பக்காத்தான் நம்புகிறது.

#TamilSchoolmychoice

கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் அத்தொகுதியில் போட்டியிட்ட கட்சி பிகேஆர். அண்மையில் ஜோகூர் ஜ.செ.க.தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ், தம் கட்சி அங்கு போட்டியிட விரும்புவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை ஜோகூர் மாநிலத்தைக் குறிவைத்து, அம்மாநிலத்தைக் கைப்பற்றும் நோக்கிலும் அந்த மாநிலத்தின் நாடாளுமன்றத் தொகுதிகளில் கணிசமானவற்றைக் கைப்பற்றும் நோக்கிலும் மக்கள் கூட்டணித் தலைவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.