கோலாலம்பூர், மார்ச் 15 – எஸ். பி. எம் தேர்வில் மாணவர்கள் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் எனும் கட்டுப்பாட்டை அரசாங்கம் 2010ல் அமல்படுத்தியிருந்தாலும், மாணவர்கள் கூடுதலாக இரண்டு பாடங்களை எடுக்க எவ்வித தடையுமில்லை என்று கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ கபார் மாஹ்மூட் (படம்) தெரிவித்தார்.
6 முக்கிய பாடங்களுடன் அதிகபட்சம் 12 பாடங்கள் மட்டுமே எடுக்கமுடியும்.
மேலும் இரண்டு பாடங்களை மட்டுமே மாணவர்கள் கூடுதலாக எடுக்கமுடியும் என்பதால், முதன்மை பாடங்களாகக் கருதப்படும் 6 முக்கியப் பாடங்களை மாணவர்கள் கண்டிப்பாக தேர்வில் எடுக்கவேண்டும் என்று மாஹ்மூட் தெரிவித்தார்.
அதை விடுத்து 4 பாடங்களும், அவர்களின் தேர்வு பாடங்கள் இரண்டும், ஆக மொத்தம் (10+2) 12 பாடங்களை மாணவர்கள் எடுக்கலாம் என்று அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் விருப்பப் பாடமாக எடுக்கும் இரண்டு பாடங்களும், அவசியம் தேர்வில் பட்டியலிடப்பட்ட பாடமாக இருக்க வேண்டும் என்று மாஹ்மூட் வலியுறுத்தினார்.
இதிலிருந்து, தமிழ்-தமிழ் இலக்கியம் எடுப்பதற்கான தடை எதுவும் இல்லை என்பதை கல்வி இயக்குனரின் அறிவிப்பால் அறியமுடிகிறது.