2 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் 50 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பெல்ஜியத்தில் இருந்து வாஷிங்டன் போய் சேர்ந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உச்சி மாநாட்டையொட்டி அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு பல அச்சுறுத்தல்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவை அனைத்திலும் பயங்கரமான அச்சுறுத்தல் தீவிரவாதிகளின் கைகளில் அணு ஆயுதங்கள் கிட்டுவது என்று அவர் கூறியுள்ளார். உச்சி மாநாட்டின் நோக்கமே இதை தடுப்பது தான் என்றும் ஒபாமா கூறியுள்ளார்.