Home Featured கலையுலகம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால் படத்தில் நடிக்கிறார் வடிவேலு!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால் படத்தில் நடிக்கிறார் வடிவேலு!

761
0
SHARE
Ad

vadivelu-vishal-600சென்னை – நடிச்சா கதாநாயகன்தான் என்று கூறிக் கொண்டிருந்த வடிவேலு, இப்போதுதான் பிரபல நடிகர்களுடன் இணைந்து காமெடி செய்யும் முடிவை எடுத்திருக்கிறார்.

இந்தப் புதிய முடிவின்படி அவர் நடிக்கப் போகும் முதல் படம் ‘கத்தி சண்டை’. தலைநகரம், மருதமலை படங்களை இயக்கிய இயக்குநர் சுராஜுடன் மீண்டும் இந்த கத்தி சண்டை படத்தில்  நடிக்கிறார்.

இந்தப் படத்தின் நாயகன் விஷால். ரோமியோ ஜூலியட் படத்தைத் தயாரித்த எஸ் நந்தகோபால் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். திமிரு படத்துக்குப் பிறகு விஷாலுடன் இந்தப் படத்தில்தான் நடிக்கிறார் வடிவேலு. கதாநாயகி உள்ளிட்ட மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.