Home Featured உலகம் அமெரிக்க அதிபர் தேர்தல்: விஸ்கான்சின் மாநிலத்தில் ஹிலாரி-டிரம்ப்புக்கு கடும் பின்னடைவு!

அமெரிக்க அதிபர் தேர்தல்: விஸ்கான்சின் மாநிலத்தில் ஹிலாரி-டிரம்ப்புக்கு கடும் பின்னடைவு!

734
0
SHARE
Ad

trump-hillaryவாஷிங்டன் – அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளரை தேர்வு செய்ய அந்நாட்டில் உள்ள 50 மாநிலங்களில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக தகுதிபெற மொத்தம் 1237 வாக்குகள் தேவை என்ற நிலையில், இதுவரை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட மாநிலங்களில் அதிக ஆதரவைபெற்றுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் முதலிடத்திலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் முன்னிலையிலும் இருந்து வருகின்றனர்.

டிரம்ப்பிடம் இருந்து இந்த வாய்ப்பை தட்டிப் பறிக்க நினைக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டெட் க்ருஸ், ஹிலாரியை பின்னுக்குத் தள்ள முயற்சித்துவரும் குடியரசுக் கட்சி வேட்பாளர் பெர்னி சான்டர்ஸ் ஆகியோரும் கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளர் என்ற கனவுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நேற்றைய வாக்குப்பதிவின்போது விஸ்கான்சின் மாநிலத்திலும் இவர்கள் அதிக ஆதரவை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.  அதிபர் வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் இந்தச் சுற்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தங்களோடு மோதும் சகக்கட்சி வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப், ஹிலாடி கிளிண்டன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஜனநாயகக் கட்சி வேட்பாளரான டெட் க்ருஸ் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளரான பெர்னி சான்டர்ஸ் ஆகியோர் அதிக ஆதரவு வாக்குகளை பெற்றுள்ளனர்.a