Home Featured தமிழ் நாடு இரட்டை இலையா? தென்னந்தோப்பா? எந்த சின்னத்தில் போட்டி என்பதில் அதிமுக-வாசன் கூட்டணி இழுபறி!

இரட்டை இலையா? தென்னந்தோப்பா? எந்த சின்னத்தில் போட்டி என்பதில் அதிமுக-வாசன் கூட்டணி இழுபறி!

645
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512சென்னை – தமிழ் மாநிலக் காங்கிரசுக்கும் (த.மா.கா), அதிமுகவுக்கும் இடையில் இன்று கூட்டணி ஒப்பந்தம் முடிவாகும் என தகவல் ஊடகங்கள் அறிவிக்கத் தயாராகி வரும் வேளையில் தமாகா எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்த விவகாரத்தில் இரு தரப்புகளுக்கும் இடையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

தங்களுக்குக் கிடைத்த தென்னந்தோப்பு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதில் வாசன் உறுதியாக இருப்பதாகவும், ஆனால், கொள்கை ரீதியாக தாங்கள் எடுத்துள்ள முடிவைத் தொடர்ந்து அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதில் அதிமுக தலைமையும் உறுதியாக இருப்பதாகத் தெரிகின்றது.

Tamil Manila Congress-emblem launching-

#TamilSchoolmychoice