Home Featured நாடு மகாதீரின் ’42 பில்லின் ரிங்கிட்’ குற்றச்சாட்டு பொய் என்பது நிரூபணமானது – நஜிப் அறிக்கை!

மகாதீரின் ’42 பில்லின் ரிங்கிட்’ குற்றச்சாட்டு பொய் என்பது நிரூபணமானது – நஜிப் அறிக்கை!

567
0
SHARE
Ad

Najib-feature-கோலாலம்பூர் – 42 பில்லியன் ரிங்கிட் நிதி மாயமாகிவிட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் சாட்டிய குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது இன்று பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கையின் மூலம் உறுதியாகிவிட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நஜிப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “1எம்டிபி-க்கு எதிரான மகாதீரின் குற்றச்சாட்டு பொய் என்பது இப்போது தெளிவாகிவிட்டது. நாட்டிற்காக அல்ல தனிப்பட்ட நோக்கத்தோடு தான் அவர் அதைச் செய்துள்ளார். அரசாங்கத்தின் கவிழ்க்க அவர் விரும்பினார்” என்று நஜிப் தெரிவித்துள்ளார்.

மேலும், பிஏசி பரிந்துரையின் படி, விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice