Home Featured நாடு பிஏசி அறிக்கை எதிரொலி: 1எம்டிபி நிர்வாகிகள் கூட்டாக இராஜினாமா செய்ய முன்வந்தனர்!

பிஏசி அறிக்கை எதிரொலி: 1எம்டிபி நிர்வாகிகள் கூட்டாக இராஜினாமா செய்ய முன்வந்தனர்!

469
0
SHARE
Ad

1MDBகோலாலம்பூர் – அரசாங்க நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee) அறிக்கை வெளியிட்டதையடுத்து, 1எம்டிபி வாரியத்தின் நிர்வாகிகள் கூட்டாக இராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர்.

“சவாலான காலங்களில் கூட 1எம்டிபி-யை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வந்தது இந்த நிர்வாகிகள் குழு. ஆனால் தற்போது வெளிவந்துள்ள பிஏசி அறிக்கை அதில் கோடிட்டுவிட்டது போல் உள்ளது”

“எனினும், பிஏசி கண்டறிந்துள்ளதை வைத்து, நிர்வாகிகள் குழு கூட்டாக இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதை நிதியமைச்சிடம் தெரிவித்துவிட்டது.”

#TamilSchoolmychoice

“இந்த முடிவை எடுப்பது கடினம் தான் ஆனால் இது தான் சரியான முடிவு என்று நாங்கள் நம்புகின்றோம். பிஏசி பரிந்துரைத்திருக்கும் எந்த ஒரு விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருக்கின்றோம்” என்று இன்று 1எம்டிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.