கோலாலம்பூர் – நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த பொதுக் கணக்குக் குழுவின் (PAC) 1எம்டிபி விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
1எம்டிபி தொடர்பான அந்த 106 பக்க அறிக்கையில், 1எம்டிபி பலவீனமடைந்ததற்கும், தடைகளை எதிர்நோக்கியதற்கும் காரணம் அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயலதிகாரி டத்தோ ஷாரோல் அஸ்ரால் ஹல்மி இப்ராகிமும், அவரது குழுவினரும் தான் காரணம் என்று பிஏசி குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, ஷாரோல் மீதும், பிற நிர்வாகிகள் மீதும் விசாரணை நடத்தவும் அமலாக்கத் தரப்பிற்கு பிஏசி பரிந்துரை செய்துள்ளது.