Home Featured தமிழ் நாடு ஒரே மேடையில் கருணாநிதி-சோனியா பிரச்சாரம் – இளங்கோவன் தகவல்!

ஒரே மேடையில் கருணாநிதி-சோனியா பிரச்சாரம் – இளங்கோவன் தகவல்!

666
0
SHARE
Ad

evks-elangovanசென்னை – தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரும் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

மேலும் முஸ்லீம் லீக், புதிய தமிழகம் உள்ளி்ட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் சோனியா கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓரிரு நாளில் காங்கிரஸ்  கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

மேலும் பேசிய அவர், ஜெயலலிதா மதுவிலக்கை அமல்படுத்த மாட்டார் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். த.மா.கா.வுக்கு சென்றவர்கள் காங்கிரசுக்கு திரும்ப வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார். த.மா.கா.வில் இருந்து விலகி மீண்டும் காங்கிரசில் சேர்ந்தவர்களை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.