Home Featured நாடு “நஜிப்பை வீழ்த்த அந்நிய நாடுகளின் தலையீடு வேண்டும் என நான் கூறவில்லை” – மகாதீர்

“நஜிப்பை வீழ்த்த அந்நிய நாடுகளின் தலையீடு வேண்டும் என நான் கூறவில்லை” – மகாதீர்

916
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப்பை வீழ்த்த அந்நிய நாடுகள் தலையிட வேண்டும் என தான் ஒருபோதும் கூறியதில்லை என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெளிவுபடுத்தியுள்ளார்.

mahathir-mohamad“வெளிநாடுகள் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிட வேண்டும் என நான் எப்போதும் கூறியதில்லை. மாறாக, நஜிப்பைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றும் அத்தனை வழிகளையும் அவர் மூடி அடைத்துவிட்டார் என்றுதான் கூறினேன். அதனை வெளிநாட்டுத் தகவல் ஊடகங்களுக்குத் தெரிவிப்பேன் என்றுதான் கூறினேன்.” என்றும் நஜிப் விளக்கம் தந்துள்ளார்.

மகாதீரின் இந்த பத்திரிக்கையாளர் பேட்டியைத் தொடர்ந்து, தொடர்பு, பல்ஊடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் “வெளிநாடுகள் நஜிப்பை வீழ்த்துவதற்கு தலையிட வேண்டும் என மகாதீர் கூறுவதைக் கேட்டு அதிர்ச்சி அடைவதாக” கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

ஆஸ்திரேலியா பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, வெளிநாட்டு நெருக்குதல் இன்றி நஜிப்பை வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனக் கூறியிருந்தார்.

மகாதீரின் கருத்தை உடனே தேசிய முன்னணி அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் வன்மையாகக் கண்டிக்கத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்துதான் தான் அப்படிக் கூறவில்லை என்ற விளக்கத்தை மகாதீர் தந்துள்ளார்.

1எம்டிபி விவகாரம் தொடர்பாக நஜிப் பதவி விலக வேண்டுமென்ற போராட்டத்தை மகாதீர் நீண்ட காலமாக முன்னின்று போராடி வருகின்றார்.