Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவின் பிரச்சாரச் கூட்ட நெரிசலில் சிக்கிய இருவர் பலி! 50 மேற்பட்டோர் மயக்கம்!

ஜெயலலிதாவின் பிரச்சாரச் கூட்ட நெரிசலில் சிக்கிய இருவர் பலி! 50 மேற்பட்டோர் மயக்கம்!

773
0
SHARE
Ad

admkவிருத்தாச்சலம் – அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெலலிதா கலந்துகொண்ட விருத்தாச்சலம் பொது கூட்டத்தில் வெயில் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கிய இரண்டு பேர் உயிரிழந்ததனர். 50 மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்குட்பட்ட 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து, ஜெயலலிதா நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டம் பட்டப் பகலில், கடும் வெயிலில் நடந்ததால் கூட்டத்திற்கு வந்தவர்கள் வெயிலில் உட்கார முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.

#TamilSchoolmychoice

குறிப்பாக பெண்கள், வயதானவர்கள் கடும் பாதிப்படைந்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் இருந்ததாலும், கூட்ட நெரிசலாலும் 50-க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டது.

பின்னர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், மயக்க நிலையில் இருந்த இருவர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.