Home Featured கலையுலகம் ரஜினிகாந்திற்கு பத்மவிபூஷன் விருது வழங்கினார் பிரணாப் முகர்ஜி!

ரஜினிகாந்திற்கு பத்மவிபூஷன் விருது வழங்கினார் பிரணாப் முகர்ஜி!

553
0
SHARE
Ad

rajiniபுதுடெல்லி – நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று பத்மவிபூஷன் விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். புற்றுநோய் நிபுணர் டாக்டர்.வி.சாந்தாவுக்கும் குடியரசுத் தலைவர் பத்மவிபூஷன் விருதை வழங்கினார்.

டாக்டர் சாந்தா சென்னை புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டது. டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு குடியரசுத் தலைவர் பத்மபூஷன் விருது வழங்கினார்.

rajinikanthமுதற்கட்டமாக 56 பேருக்கு விருது வழங்கப்பட்ட நிலையில் மற்றவர்களுக்கு தற்போது விருதுகள் வழங்கப்பட்டது. நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.