Home Featured வணிகம் ‘கசகசா கேக் சாப்பிட்டா கைது செய்வோம்’ – போதைப் பொருள் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை!

‘கசகசா கேக் சாப்பிட்டா கைது செய்வோம்’ – போதைப் பொருள் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை!

998
0
SHARE
Ad

Poppy seedsகோலாலம்பூர் – ‘கசகசா தூவுன கேக் சாப்பிட்டா கைது செய்வோம்’ என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மலேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு. 

கசகசா (Poppy Seeds) என்றழைக்கப்படும் விதைகளை, கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மேல் தூவி சில தரப்பினர் விற்பனை செய்து வருவதை நகரின் போதை மருந்து தடுப்பு குற்றப் புலனாய்வுத் துறைக் கண்டறிந்துள்ளது. 

இது குறித்து அத்துறையின் தலைமை எஸ்ஏசி வான் அப்துல்லா இஷாக் கூறுகையில், “அதை உட்கொண்டவர்கள் போதை மருத்துப் பரிசோதனை செய்யப்படுவார்கள். அவர்களது சிறுநீரில் போதை மருந்திற்கான அடையாளங்கள் தென்பட்டால், அதை அவர்கள் மறுத்தாலும் கூட, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மலேசியாவைப் பொறுத்தவரையில், கசகசாவை உட்கொள்வது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டுள்ள அவர், பிடிபட்டவர்கள் மீது அபாயகரமான போதை மருந்துகள் சட்டம் 1952, பிரிவு 15(1)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு வருட சிறைத் தண்டையோ அல்லது 5000 ரிங்கிட் அபராதமோ விதிக்கப்படுவார்கள்” என்றும் வான் அப்துல்லா இஷாக் தெரிவித்துள்ளார்.

மேலும், பாப்பி செடியில் இருந்து கிடைக்கும் கஞ்சாவை 5 கிராம் வைத்திருந்தால் கூட டிடிஏ  1952, பிரிவு 6-ன் கீழ் சட்டப்படி குற்றம் என்றும், அதற்கு 5 வருடங்கள் சிறைத் தண்டனையோ அல்லது 20,000 ரிங்கிட் அபராதமோ விதிக்கப்படலாம் என்றும் வான் அப்துல்லா இஷாக் எச்சரித்துள்ளார்.

அண்மையில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், சில தரப்பினர் 13 ரிங்கிட்டிற்கு ‘லெமன் பாப்பி சீட் கேக்ஸ்’ என்ற பெயரில் அதனை விற்பனை செய்து வந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.

எனினும், அதுபோன்ற கேக்குகளில் உண்மையாகவே ‘மார்பின்’ போன்ற போதைப் பொருட்கள் அடங்கியுள்ளதா என்பதைக் கண்டறிய மலேசிய வேதியியல் ஆய்வுத்துறையிடம் மேல் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாகவும் வான் அப்துல்லா இஷாக் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பியா, மத்தியக் கிழக்கு, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கசகசா என்ற இந்த பாப்பி விதைகள், உணவுப் பொருட்களில் சேர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.