Home Featured தமிழ் நாடு திருச்சியில் நாளை பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் அமித்ஷா!!

திருச்சியில் நாளை பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் அமித்ஷா!!

604
0
SHARE
Ad

amit-shah-tamilisai23திருச்சி – பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என பலமுனை போட்டி நிலவுகிறது. பாரதிய ஜனதா கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 45 தொகுதிகள், தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு 24 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாஜக இதுவரை 84 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, தொகுதி உடன்பாடு ஏற்படாததால் வெளியேறியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் திருச்சியில் நாளை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளனர். பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.