Home Featured நாடு பினாங்கின் மிக நீளமான மலைப்பாம்பு இறந்தது!

பினாங்கின் மிக நீளமான மலைப்பாம்பு இறந்தது!

496
0
SHARE
Ad

penangpython2_11042016_620_403_100ஜார்ஜ் டவுன் – உலகின் மிக நீளமான பாம்பு என்ற கின்னஸ் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 250 கிலோ எடை கொண்ட பினாங்கு மலைப்பாம்பு, எதிர்பாராதவிதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்துவிட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

என்றாலும், இறப்பதற்கு ஒருநாள் முன்பு, அப்பாம்பு முட்டைகளை இட்டுள்ளதாகவும், இன்று அதைப் பற்றி முழுத் தகவல்களை சிவில் தற்காப்புத்துறை (JPAM) வெளியிடுவதாகவும் ‘த ஸ்டார்’ செய்தி இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை மதியம், பாயா தெருபோங் என்ற இடத்தில் இருந்த கட்டுமானத் தளத்தில், மரம் ஒன்றின் அடியில் இருந்து அப்பாம்பை வீரர்கள் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice