Home Featured தமிழ் நாடு கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டி! 23-ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார்!

கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டி! 23-ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார்!

506
0
SHARE
Ad

karunanidhi-600சென்னை – திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூரில் தொகுதியில் போட்டியிடுகிறார். 23-ஆம் மனுத்தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் மே 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான மனுதாக்கலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. தேர்தலுக்கு மிக குறுகிய  நாட்களே இருப்பதால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை  அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். அதுபோல, மற்ற கட்சிகளின் தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியும்,  மக்கள் நலக்கூட்டணியும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. டாக்டர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன் ஆகியோர் முதல்கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை முடித்து விட்டனர்.

#TamilSchoolmychoice

அடுத்தக் கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து விட்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்த மக்கள்நலக் கூட்டணி கட்சித்தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்த கூட்டணியுடன் உடன்பாடு செய்துள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

இன்று விஜயகாந்த் அம்பத்தூர், வில்லிவாக்கம், ஆவடி, மதுரவாயல், வில்லிவாக்கம் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்ட உள்ளார். பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர்களும் ஏற்கனவே பிரச்சாரத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி விட்டதால் தி.மு.க.வும் களப்பணியை விறுவிறுப்பாக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ‘நமக்கு நாமே’ சுற்றுப்பயணம் மேற்கொண்டு மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அடுத்தக் கட்டமாக நாளை வேட்பாளர்களை அறிவித்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க தி.மு.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பிரத்யேகமாக நவீன பிரச்சார வேன்கள் தயாரித்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வரும் 23-ஆம் தேதி (சனிக்கிழமை கிழமை) பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரும் 15-ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். அவர்கள் இருவரும் வேனில் தொகுதி வாரியாக சென்று  தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளனர்.

ஏப்ரல் 23 –ஆம் தேதி மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறார், மாலை 6 மணிக்கு  மரக்காணம் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 25 –ஆம் தேதி திருவாரூரில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.