Home Featured நாடு வேறு தலைப்பில் பேச ஒப்புக்கொண்டதால் மலாக்காவில் உரையாற்ற ஜாகிருக்கு மீண்டும் அனுமதி!

வேறு தலைப்பில் பேச ஒப்புக்கொண்டதால் மலாக்காவில் உரையாற்ற ஜாகிருக்கு மீண்டும் அனுமதி!

955
0
SHARE
Ad

zahidhamidicitizen1606கோலாலம்பூர் – வரும் ஏப்ரல் 17-ம் தேதி, மலாக்காவிலுள்ள மலேசியத் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற, இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாம் சமய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கிக் கொள்ளப்பட்டது.

‘இந்து சமயம் மற்றும் இஸ்லாம் இடையிலான ஒற்றுமைகள்’ என்ற தலைப்பிலான உரையை மாற்றி வேறு ஒன்றைப் பற்றி பேச அவர் ஒப்புக் கொண்டதால், அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

“நான் மலாக்கா முதலமைச்சரிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசிவிட்டேன். இந்த முடிவு குறித்தும் அவரிடம் தகவல் தெரிவித்துவிட்டேன்” என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சாஹிட் தெரிவித்துள்ளார் என ‘ஸ்டார்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முன்னதாக, தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மலாக்காவில் அவர் உரையாற்ற விதிக்கப்பட்ட தடை குறித்து மறுபரிசீலனை செய்யப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.