Home Featured இந்தியா விஜய் மல்லையாவின் கடப்பிதழ் முடக்கப்பட்டது!

விஜய் மல்லையாவின் கடப்பிதழ் முடக்கப்பட்டது!

894
0
SHARE
Ad

vijaymallya.புதுடெல்லி – வங்கிகளில் பல ஆயிரம் கோடி பணத்தை கடனாகப் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல், இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடப்பிதழை மத்திய வெளியுறவு அமைச்சு முடக்கிவிட்டதாக அறிவித்துள்ளது.

இந்திய அமலாக்கத் துறை கேட்டுக் கொண்டதன் பேரில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத் துறை 2 முறை சம்மன் அனுப்பியும், அவர் நேரில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice