Home Featured நாடு கிளந்தான் பள்ளி ஹிஸ்டீரியா சம்பவம்: முழு அறிக்கைக்காகக் காத்திருக்கிறது அமைச்சு!

கிளந்தான் பள்ளி ஹிஸ்டீரியா சம்பவம்: முழு அறிக்கைக்காகக் காத்திருக்கிறது அமைச்சு!

707
0
SHARE
Ad

hysteria 130416கோலாலம்பூர் – 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஹிஸ்டீரியா பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் கிளந்தானின் பெங்காலான் செபா பள்ளியில், நடந்தவை பற்றிய முழு அறிக்கைக்காக காத்திருக்கிறது கல்வியமைச்சு.

புகைமூட்டம் மற்றும் வெயில் போன்ற காரணங்களுக்காக பள்ளி விடுமுறை அளிக்கப்படுவது போல், பிரச்சனைக்குத் தீர்வு காணும் வரை தேவைப்படும் நேரத்தில் அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கவும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இது குறித்து துணைக் கல்வியமைச்சர் சோங் சின் வூன் கூறுகையில், “சிங் மிங் நேரத்தில் சீனப் பள்ளிகள் விடுமுறை அளிக்க கோரிக்கை வைப்பது போல், அவர்கள் விடுமுறை அளிக்கும் படி கேட்கலாம்.”

#TamilSchoolmychoice

“நான் இன்னும் அந்த சம்பவம் பற்றிய முழு அறிக்கையைப் பெறவில்லை. எனவே கருத்துத் தெரிவிப்பதற்கு முன்பு அமைச்சரவைக்கு முழு அறிக்கை கிடைக்கட்டும்”

“ஆனால், எந்த ஒரு பள்ளிக்கும் விடுமுறை அளிக்க அனுமதிப்பது, மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை பாதிக்கிறதா என்பதை வைத்து தான். முழு அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்” என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் சோங் சின் வூன் தெரிவித்துள்ளார்.