சென்னை – வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் அவரவர் போட்டியிடும் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 22 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சென்னை ஜெயலலிதா நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதேபோல் திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி வேட்புமனு தாக்கல் செய்தார். தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போட்டியிடும் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாசும் நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். கொளத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரிடம் ஸ்டாலின் இன்று பிற்பகல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
உளுந்தூர்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பகல் 12 மணியளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவரான தொல்.திருமாவளவன் இன்று வேட்புமனு தாக்கல் செய்யகிறார்.