Home Featured கலையுலகம் 70 பேருக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய சமந்தா!

70 பேருக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய சமந்தா!

669
0
SHARE
Ad

samthaசென்னை – நடிகை சமந்தா 70 பேருக்கு இலவச இருதய அறுவை சிகிச்சைக்கு உதவியிருக்கிறார். இது குறித்து சமந்தா கூறியதாவது;-விஜய்யுடன் நான் நடித்த ‘தெறி’ படத்தின் வெற்றி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழில் ராசி இல்லை என்று என்னை குறை சொன்னவர்கள் இனி வாய்திறக்க முடியாது. நான் சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தேன். மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிகம் உண்டு.

சினிமாவில் நடிக்கத் தொடங்கி 6 வருடங்கள் ஆகிறது. எனவே என்னிடம் இருக்கும் பணத்தை கொண்டு முடிந்த அளவு உதவுகிறேன். இது வரை 70 பேருக்கு இலவச இதய அறுவை சிகிச்சைக்கான முழு உதவியையும் செய்து இருக்கிறேன்.

#TamilSchoolmychoice

இதற்காக ‘பிரத்யூக்ஷா பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை அமைத்து இருக்கிறேன். இன்னும் பலருக்கு உதவ வேண்டும் என்பது எனது விருப்பம். எனவே என்னால் முடிந்ததை செய்து கொண்டு இருக்கிறேன்” என்றார்.