Home Featured தமிழ் நாடு அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் – கருணாநிதி உருக்கம்!

அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் – கருணாநிதி உருக்கம்!

565
0
SHARE
Ad

karunanidhiதஞ்சாவூர் – 10 வயது முதல் அரசியல் பணி ஆற்றி வருகிறேன். ஓய்வு இல்லாமல் உழைத்து கொண்டிருக்கிறேன். இப்போது ஓய்வை விரும்புகிறேன். நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தஞ்சாவூர் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கருணாநிதி கூறியதாவது;- இங்கு இளைஞர்கள் கூட்டத்தை பார்க்கிறேன். இளைஞர்கள் தான் இந்த சமுதாயத்தின் ஆணி வேர்கள். இளைஞர்கள் தான் நாட்டை ஆள கூடியவர்கள். என்னால் நடக்க கூட முடியவில்லை. அப்படி இருந்தாலும் கூட நீங்கள் காட்டுகிற உணர்வு, என் உள்ளத்தில் உள்ள அன்பு, ஆர்வம் இவைகளுக்கு ஈடு இணை கிடையாது.

தமிழர்களை காப்பாற்ற, நம்மை விட்டால் யாரும் இல்லை. வேறு யார் வந்து காப்பாற்றப்போகிறார்கள். நாம்தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். நாம்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்.

#TamilSchoolmychoice

எனக்கு 92 வயதாகிறது. 10 வயது தொடங்கி அரசியல் பணியாற்றுகிறேன். ஓய்வு இல்லாமல் உழைத்து கொண்டிருக்கிறேன். அந்த ஓய்வை விரும்புகிறேன். நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நான் பேச முடியாது. தழுதழுத்து பேசுகிறேன். என்னால் சரியாக நடக்கக்கூட முடியாது. தள்ளாடி தள்ளாடி நடக்கிறேன்.

உங்கள் அன்பால் உதவியால் நான் கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆதரிப்பது தனிப்பட்ட கருணாநிதியை அல்ல. கருணாநிதி கொண்டிருக்கும் கொள்கை, உணர்ச்சி, வேகத்தை. தமிழர்களை காக்க என்னை விட்டால் வேறு கதியில்லை. நாம் தான் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

எனவே உங்களை கேட்டுக்கொள்வது தியாகத்துக்கு தயாராக இருங்கள். இந்த தேர்தலில் எதிரிகள் வெற்றி பெற்று விட்டால் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ் சமுதாயத்துக்கு விடுதலை, சுதந்திரம் கிடையாது. கருணாநிதி கொண்டிருக்கிற கொள்கை, அந்த உணர்ச்சியை, அந்த வேகத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.