Home Featured தமிழ் நாடு விஜயகாந்தின் சொத்து ரூ.20 கோடி: வேட்புமனுத் தாக்கலில் தகவல்!

விஜயகாந்தின் சொத்து ரூ.20 கோடி: வேட்புமனுத் தாக்கலில் தகவல்!

611
0
SHARE
Ad

vijayakanth_new 3.2விழுப்புரம் – விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு 20 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். கையிருப்பாக 6 லட்ச ரூபாய். மனைவி கையிருப்பு 6 லட்சம். வங்கி வைப்பு நிதி 1.56 லட்சம் ரூபாய்.

கேப்டன் பார்ம் லிட்., பங்குகளாக 3 கோடியே 68 லட்சம் ரூபாய். கேப்டன் தொலைக்காட்சி நிறுவன பங்கு 10 கோடி ரூபாய். தங்க நகைகள் 612 கிராம், மனைவியிடம் 828 கிராம் உள்ளது. தன் பெயரில், 9 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரம் ரூபாயும், மனைவி பெயரில் 1.28 கோடி ரூபாயும் வைத்துள்ளார்.

மதுராந்தகம் கரடிப்புத்தூர் இருகூர் பகுதியில் 12.46 கோடி ரூபாய் மதிப்பில் 61 ஏக்கர், மனைவி பெயரில் 8.47 கோடி ரூபாய் மதிப்பில் 39 ஏக்கர், மகன் பெயரில் 43 லட்சம் ரூபாய் மதிப்பில் 32 ஏக்கர் நிலம். விவசாய மற்ற நிலங்களாக விஜயகாந்திற்கு ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பிலும், மனைவி பெயரில் 4 கோடியே 43 லட்சமும் உள்ளது.

#TamilSchoolmychoice

வணிக கட்டடங்கள் 6 கோடியே 87 லட்சம் ரூபாய்; குடியிருப்பு கட்டடங்கள் ஒரு கோடியே 61 லட்ச ரூபாய். மொத்தமாக விஜயகாந்த்திற்கு 19.8 கோடி ரூபாய், மனைவிக்கு 6.5 கோடியும், மகனிற்கு 1.2 கோடியும், மற்றொரு மகன் பெயரில் 28 லட்சமும் சொத்துக்கள் உள்ளன.

விஜயகாந்த் செலுத்த வேண்டிய வரி பாக்கிகள் மற்றும் கடனாக 7 கோடியே 52 லட்சமும், வங்கிக் கடனாக 2 கோடியே 54 லட்ச ரூபாயும்; என மொத்தம் 20 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாக விஜயகாந்த் வேட்பு மனுத்தாக்கலில் தெரிவித்துள்ளார்.