Home Featured நாடு ஈப்போ சிலைகள் உடைப்பு விவகாரம்: 29 வயது ஆடவர் மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன!

ஈப்போ சிலைகள் உடைப்பு விவகாரம்: 29 வயது ஆடவர் மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன!

712
0
SHARE
Ad

amok man caughtஈப்போ – ஈப்போவில் கடந்த வாரம் இந்து ஆலயம் ஒன்றில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கிய 29 வயது ஆடவர் மீது நேற்று வெள்ளிக்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

குற்றவியல் சட்டம் 295-ன் கீழ் ஆலயத்தின் சிலைகளை சேதப்படுத்தியது மற்றும் அரிக்கக் கூடிய, வெடிக்கக் கூடிய மற்றும் அபாயகரமான ஆயுதங்கள் சட்டப்பிரிவு 6-ன் கீழ், சம்பவத்தின் போது வெட்டுக்கத்தியை கையில் ஏந்தியிருந்தது ஆகியவற்றின் கீழ் அந்நபருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நீதிபதி இக்மால் ஹிஷாம் மொகமட் முன்னிலையில் நேற்று ஆஜர் படுத்தப்பட்ட பாத்தி முன்சிர் நஸ்ரி (வயது 29) என்ற அந்நபர், தன் மீதான இரு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொள்ள மறுத்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், பஹாகியா உலு கிண்டா மருத்துவமனையில் ஒரு மாதம் அவருக்கு மனநல சிகிச்சை வழங்க நீதிபதி இக்மால் ஹிஷான் உத்தரவிட்டார்.

அதோடு, வரும் மே 30-ம் தேதிக்கு இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.