Home Featured தமிழ் நாடு நான் பரதேசியாகவே இருக்கிறேன் – இளங்கோவனுக்கு சீமான் பதிலடி!

நான் பரதேசியாகவே இருக்கிறேன் – இளங்கோவனுக்கு சீமான் பதிலடி!

631
0
SHARE
Ad

ilangovanதிண்டுக்கல் – கண்ணியம் தவறி பேசி, தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள தமிழகக் காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பதிலுக்கு மரியாதையும், மதிப்பும் கொடுத்து மறுமொழி கூறியுள்ளார் சீமான்.

“ஈவிகேஎஸ் இளங்கோவன் உத்தமராகவே இருக்கட்டும் நான் பரதேசியாகவே இருக்கிறேன்” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக அரசியலில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸ் குழுத் தலைவராக பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவை மோடி சந்தித்ததை விமர்சித்து அவர் கூறிய கருத்துகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் மகளிர் தலைவர் விஜயதரணியை தரக்குறைவாகப் பேசியதாக சர்ச்சையில் சிக்கினார். இது மட்டுமல்லாமல் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை கரகாட்டக்காரி என விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். காங்கிரஸ் பற்றிய நாம் தமிழர் கட்சி சீமானின் விமர்சனம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு இளங்கோவன் கூறியதாவது, “சில பெயர்கள் அழகாகத்தான் இருக்கும். பரதேசியெல்லாம் சீமான் என்று பெயர் வைத்துக்கொள்வார்கள். ஆனால், அதெற்கெல்லாம் பதில் சொல்ல நான் விரும்பவில்லை” என்று இளங்கோவன் கூறினார்.

இதுதான் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டு பின்னர் வருத்தம் தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்றார்.

மேலும் அவர் உத்தமராகவே இருக்கட்டும், நான் பரதேசியாகவே இருக்கிறேன் என்று சீமான் கூறினார். “பரவாயில்லை என்னை பரதேசி என்று சொல்வது என்னைவிட மூத்த, நான் மிகவும் மதிக்கும் இளங்கோவன் அண்ணன்தானே” என்றும் கண்ணியத்துடன் பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கிறார் சீமான்.

பரபரப்பான தேர்தல் பிரச்சாரங்களில், தனது தரம் தாழ்ந்த வார்த்தைகளால் மக்கள் மனதில் படுபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் இளங்கோவன் ஒருபுறம் –

ஆனால், மூத்தவருக்குக் கொடுக்கும் மரியாதையை உரிய முறையில் கொடுத்து, கண்ணியம் காத்திருக்கும் சீமான் இன்னொரு புறம் –

தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்!