Home Featured உலகம் இளவரசி சார்லோட்: இன்று ஒரு வயது நிறைவு! புதிய புகைப் படங்கள் வெளியீடு!

இளவரசி சார்லோட்: இன்று ஒரு வயது நிறைவு! புதிய புகைப் படங்கள் வெளியீடு!

730
0
SHARE
Ad

இலண்டன் – அண்மையில் எலிசபெத் மகாராணி தனது 90வது வயது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கும் வேளையில், அவரது கொள்ளுப் பேத்தியும், இளவரசர் வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் அரச தம்பதியரின் இரண்டாவது குழந்தையுமான இளவரசி சார்லோட் இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.

இதனைத் தொடர்ந்து அவரது ஒரு வயது நிறைவு நிரம்பிய அழகு கொஞ்சும் தோற்றங்களைக் கொண்ட புதிய புகைப்படங்களை கென்சிங்டன் அரண்மனை தனது டுவிட்டர் பக்கத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டிருக்கின்றது.

“எங்கள் குடும்ப நேரத்தின் நடுவில் மகிழ்ச்சியான தருணங்களில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களை வெளியிடுகின்றோம். எங்களைப் போலவே மற்றவர்களும் இந்தப் புகைப்படங்களைப் பார்த்து  மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறோம்” என்று இளவரசர் வில்லியம் தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அந்தப் புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு:

Princess Charlotte-

Princess Charlotte-1

Princess Charlotte-2

Princess Charlotte-3

-செல்லியல் தொகுப்பு