தற்போது இலண்டனில் நாடு கடந்து வாழ்ந்து வரும் விஜய் மல்லையாவின் அனைத்துலகக் கடப்பிதழை ரத்து செய்துள்ள இந்திய அரசாங்கம், அவரை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சிகள் எடுத்து வருகின்றது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உதவிகளையும் நாடியுள்ளது.
இந்நிலையில்தான், உங்களை மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் விலக்கக் கூடாது எனக் காரணம் கேட்கும் கடிதத்தை அவருக்கு மாநிலங்களவையின் சிறப்புக் குழு அனுப்பியிருந்தது.
மல்லையா கர்நாடக மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.
தற்போது, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால், இனி அவர் மீது மாநிலங்களவை உறுப்பினர் என்ற அடிப்படையில் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது.