Home Featured தமிழ் நாடு “3வது பெரிய அணி மக்கள் நலக் கூட்டணி அல்ல! சீமான்!” – இளங்கோவன் அங்கீகாரம்!

“3வது பெரிய அணி மக்கள் நலக் கூட்டணி அல்ல! சீமான்!” – இளங்கோவன் அங்கீகாரம்!

742
0
SHARE
Ad

seemanசென்னை – தமிழகத்தின் ‘தந்தி’ தொலைக்காட்சியில் பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடத்திய நேர்காணலில் கலந்து கொண்ட தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழகத்தின் மிகப் பெரிய அணிகள் அதிமுக, திமுக-காங்கிரஸ் கூட்டணி தவிர்த்து மூன்றாவது பெரிய அணியாக மக்கள்நலக் கூட்டணி-விஜயகாந்த் இணைந்த கூட்டணி அல்ல என கருத்து தெரிவித்துள்ளார்.

மாறாக, மூன்றாவது பெரிய அணியாக-அரசியல் சக்தியாக தான் பார்ப்பது சீமானைத்தான் என்று கூறியுள்ளார்.

E.V.K.S.ELANGOVANமுன்பே பதிவு செய்யப்பட்ட இளங்கோவனின் இந்த நேர்காணல், கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

#TamilSchoolmychoice

இது மூத்த, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான இளங்கோவன் சீமானுக்கு வழங்கியுள்ள அங்கீகாரம் என்றாலும், அதே இளங்கோவன்தான் இதே சீமானை “பரதேசிகளெல்லாம் சீமான் என்று பெயர் வைத்துக் கொள்வார்கள்.  அவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை” எனக் கடுமையாகச் சாடியிருந்தார்.

இளங்கோவனுக்கு பதிலளித்திருந்த சீமான், “பரவாயில்லை நான் பரதேசியாகவே இருக்கிறேன். மூத்த அண்ணன் இளங்கோவன்தானே அப்படி கூறியிருக்கின்றார். பரவாயில்லை” எனக் கூறியிருந்தார்.