Home Featured நாடு சபா அருகே படகில் சென்ற 3 வெளிநாட்டவர், 1 மலேசியர் மாயம்!

சபா அருகே படகில் சென்ற 3 வெளிநாட்டவர், 1 மலேசியர் மாயம்!

604
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – சபாவின் வடக்குப் பகுதியான புலாவ் பாலாம்பங்கானில் இருந்து கூடட் மாவட்டம் தஞ்சோங் சிம்பாங் மெங்காயாவுக்கு படகில் சென்ற நான்கு பேரை இரண்டு நாளாகக் காணவில்லை.

அந்த நான்கு பேரில் இருவர் ஸ்பெயின் நாட்டவர்கள், ஒருவர் சீனாவைச் சேர்ந்தவர் மற்றொருவர் மலேசியர் என்று கூறப்படுகின்றது.

Kudat_02_small

#TamilSchoolmychoice

(கூடட் மாவட்டம் – கோப்புப் படம்)

அவர்களைத் தேடும் பணியில் மலேசிய கடலோரக் காவல்படை மற்றும் கடல்சார் அமலாக்கத்துறை ஆகியோர் 6 படகுகளில், மாயமானவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முதல் கடற்படை ஹெலிகாப்டரும் தேடும் பணியில் ஈடுபடவுள்ளது.

எஞ்சின் பழுது காரணமாக நின்ற படகு, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவர்கள் நால்வரும் கடத்தப்பட்டதற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.