Home Featured உலகம் அமெரிக்க அதிபர் போட்டியிலிருந்து டெட் குருஸ் விலகல்!

அமெரிக்க அதிபர் போட்டியிலிருந்து டெட் குருஸ் விலகல்!

626
0
SHARE
Ad

ted-cruz-american presidential candidateவாஷிங்டன் – நேற்று நடைபெற்ற இண்டியானா மாநிலத்தின் குடியரசுக் கட்சி மாநிலத்துக்கான அதிபர் வேட்பாளருக்கானத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து டெக்சாஸ் மாநில செனட்டர் டெட் குருஸ் (படம்) அமெரிக்க அதிபருக்கான போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.

இண்டியானா மாநிலத்தின் குடியரசுக் கட்சிப் பேராளர்கள் மற்றொரு போட்டியாளரான டொனால்ட் டிரம்பைத் தேர்ந்தெடுத்ததைத் தொடர்ந்து, அவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.