Home Featured இந்தியா விஜய் மல்லையா மாநிலங்களவை உறுப்பினர் ராஜினாமா நிராகரிப்பு!

விஜய் மல்லையா மாநிலங்களவை உறுப்பினர் ராஜினாமா நிராகரிப்பு!

1032
0
SHARE
Ad

புதுடில்லி – வங்கிகளில் பெற்ற 9,400 கோடி ரூபாய் கடன்களைத் திரும்பச் செலுத்தாமல் தலைமறைவாகி இருக்கும், இந்தியக் கோடீஸ்வரர் விஜய் மல்லையா மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார்.

ஆனால், அவரது பதவி ராஜினாமா நடைமுறைப்படி செய்யப்படவில்லை எனக் கூறி அவரது ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவரும், துணை அதிபருமான ஹாமிட் அன்சாரி நிராகரித்துள்ளார்.

vijay-mallayaமாநிலங்களவையின் நெறிமுறைகள் குழுவும் அவரது ராஜினாமாவை நிராகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

#TamilSchoolmychoice

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலண்டனிலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை மல்லையா அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தை அவர் கணினி வழி நகல் எடுத்து (ஸ்கேன்) அனுப்பியிருப்பதுதான் அவரது ராஜினாமா கடிதம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என கருதப்படுகின்றது.

மல்லையாவின் ராஜினாமா நடைமுறைகளுக்கு ஏற்ப செய்யப்படவில்லை எனவும், அவரது கையெழுத்து அசல் கையெழுத்தைப் போல இல்லை எனவும் மாநிலங்களவையின் செயலாளர் மல்லையாவுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.