Home Featured நாடு தாசிக் பெடு அருகே தந்தங்கள் அகற்றப்பட்ட நிலையில் யானையின் சடலம் கண்டெடுப்பு!

தாசிக் பெடு அருகே தந்தங்கள் அகற்றப்பட்ட நிலையில் யானையின் சடலம் கண்டெடுப்பு!

744
0
SHARE
Ad

Elephantஅலோர் ஸ்டார் – கடந்த மே 1-ம் தேதி, கெடாவிலுள்ள பெடு ஏரி அருகே, மீன் பிடிக்கச் சென்ற குழு ஒன்று, அங்கு கரையில் யானை ஒன்றின் மக்கிப்போன சடலத்தைக் கண்டறிந்துள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த யானை இறந்திருக்கக் கூடும் என நம்பப்படுகின்றது. அதன் தந்தங்கள் வெட்டப்பட்டிருப்பதால் யானை வேட்டையாடப் பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாசிக் பெடு மீனவர்கள், வளர்ப்போர் மற்றும் சுற்றுலா கழகக் கூட்டுறவின் செயலாளர் அமிர் வாகாப் கூறுகையில், தனக்கு தகவல் கிடைத்து அங்கு சென்று பார்த்த போது, அது யானையின் சடலம் எனக் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தண்ணீர் அருந்துவதற்காக காட்டில் இருந்து ஏரிக்கு வந்த யானையை, தாசிக் பெடுவில் உள்ள சட்டவிரோதப் படகுத்துறையில் மறைந்திருந்த இருந்து சிலர் வேட்டையாடிக் கொன்றிருக்கலாம் என்று அமீர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து, மாநில அரசாங்கமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் எனத் தான் நம்புவதாகவும் அமீர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த யானையின் உடலைக் கைப்பற்றியுள்ள அதிகாரிகள், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அதன் இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிவார்கள் என கெடா வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் பராமரிப்புத் துறை இயக்குநர் மொகமட் ஹாபிட் ரொஹானி தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு, இரண்டு யானைகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

படம்: Siakap Keli