கிள்ளான் – தமிழ் நாட்டின்-தமிழர்களின் பாரம்பரிய சின்னமாக உலகம் எங்கும் போற்றப்படுவது இராஜ இராஜ சோழன் அமைத்த தஞ்சை பெரிய கோவில். இந்த ஆலயத்தின் கட்டுமானமும், அதில் பொதிந்துள்ள பொறியியல் மற்றும் தொழில் நுட்ப நுணுக்கங்களும், இன்றுவரை நிபுணர்களால் அதிசயித்துப் பாராட்டப்படுகின்றது.
தஞ்சை பெரிய கோவில் குறித்த விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, அந்த ஆலயம் குறித்த பொறியியல் நுணுக்கங்களை அறிந்திருக்கும், தமிழக பொறியியலாளர் சு.இராஜேந்திரன் தனது அனுபவங்களையும், தான் அறிந்தவற்றையும் மலேசியத் தமிழர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றார்.
இன்று புதன்கிழமை (4 மே 2016) மாலை 7.30 மணிக்கு கிள்ளான் டேவான் ஹம்சா மண்டபத்தில் கிள்ளான் விண்வெளிக் கலைமன்றத்தின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சிக்கு செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் தலைமை தாங்குவார்.
இலவசமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நமது பெருமை மிக்க பாரம்பரியமான தஞ்சை பெரிய கோவில் குறித்த சுவாரசியமான தகவல்களை கேட்டுப் பயன்பெறுமாறு கிள்ளான் வட்டார பொதுமக்களை ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.