Home Featured நாடு கூச்சிங்கில் இன்று நஜிப் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

கூச்சிங்கில் இன்று நஜிப் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

977
0
SHARE
Ad
adenan-najibகூச்சிங் – கூட்டரசு அமைச்சரவைக் கூட்டம் இன்று கூச்சிங்கில் உள்ள விஸ்மா பாபாவில் நடைபெறுகின்றது.
கடந்த 2009-ம் ஆண்டிற்குப் பிறகு, முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம், தலைநகருக்கு வெளியே நடத்தப்படுகின்றது.
இதற்கு முன்பு, கடந்த 2009-ம் ஆண்டு, குவாந்தான், பகாங்கில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இன்று காலை 8 மணி தொடங்கி அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர்கள் வருகை புரியத் தொடங்கியுள்ளனர்.
காலை 9 மணி அளவில் சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அட்னான் சாத்திம் வருகை புரிந்தார். அவரது வருகைக்குப் பிறகு 20 நிமிடங்களில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விஸ்மா பாபாவிற்கு வருகை புரிந்தார் என ஸ்டார் இணைதளம் தெரிவித்துள்ளது.