Home Featured தமிழ் நாடு யார் எதிர்த்தாலும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் – மதுரையில் கருணாநிதி சபதம்!

யார் எதிர்த்தாலும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் – மதுரையில் கருணாநிதி சபதம்!

784
0
SHARE
Ad

04-1462308149-karunanidhimaduraiமதுரை – சேது சமுத்திர திட்டத்தை யார் எதிர்த்தாலும் திமுக ஆட்சி அமைந்தததும் நிறைவேற்றப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். மதுரையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது; 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன என ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஆனால், ரூ. 100 கோடியில் மதுரையில் தமிழ் தாய்க்கு சிலை அமைக்கப்படும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார் ஜெயலலிதா. மதுரையில் எங்கு தேடிப்பார்த்தும் சிலையை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

#TamilSchoolmychoice

இது போன்ற பொய் மூட்டைகளை ஜெயலலிதா அவிழ்த்து விட்டு கடந்த 5 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருகிறார். அவரின் பொய் மூட்டைகளுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. இதற்குமேல் ஜெயலலிதாவை நம்பினால், நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்.

எனவே, நான் மதுரையையும், மதுரை மக்களையும் நேசிப்பேன். மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் வகையில் சேது சமுத்திர திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்தால் மதுரை வளம் பெறுவதோடு சுற்றியுள்ள பகுதிகளிலும் வாணிபம் வளரும்.

சேது சமுத்திர திட்டம் திறைவேறியிருந்தால், மதுரை செழிப்புள்ள, அருமையான வசதிகள் கொண்ட நகராக மாறியிருக்கும். சிலர் ராமர் பாலம் எனக் கூறி திட்டத்தை தடுத்து வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தததும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும்.

யார் எதிர்த்தாலும் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தததும் மதுரையில் நடைபெற்ற கிரானைட் ஊழல் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும் என கருணாநிதி தெரிவித்தார்.