Home Featured நாடு கேலிச்சித்திரக்காரர் சூனாருக்கு ஜெனீவாவில் அனைத்துலக விருது!

கேலிச்சித்திரக்காரர் சூனாருக்கு ஜெனீவாவில் அனைத்துலக விருது!

818
0
SHARE
Ad

Zunarகோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல அரசியல் கேலிச் சித்திரக்காரர் சூனாருக்கு, ஜெனீவாவில் நேற்று 2016-ம் ஆண்டு, கேலிச்சித்திரங்கள் அமைதிகான விருது வழங்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, ஜெனீவா நகரிலுள்ள பாலாய்ஸ் இய்னார்டு என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற விருதளிப்பு விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

மலேசியாவின் ‘ஊழல் மற்றும் அடக்குமுறை ஆட்சிக்கு’ எதிராகத் தொடர்ந்து போராடுவதற்கு இந்த அங்கீகாரம் ‘புதிய உத்வேகத்தை’ அளிப்பதாக சூனார் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “மலேசியாவில் மனித உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் மிகுந்த நெருக்கடியில் உள்ளது” என்று சூனார் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சுல்கிப்ளி அன்வார் ஹேக் என்ற இயற்பெயரைக் கொண்ட சூனார், கடந்த 2010 -ல் ஒருமுறையும், 2015-ல் ஒருமுறையும் தேச நிந்தனை சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில், 9 தேச நிந்தனைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மலேசிய நீதித் துறையைக் குறை கூறி டுவிட்டர் வழி சூனார் (படம்) அனுப்பிய செய்திகளுக்காக அவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.