Home Featured தமிழ் நாடு கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம் – ஸ்டாலின் ஒப்புதல்! (காணொளியுடன்)

கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம் – ஸ்டாலின் ஒப்புதல்! (காணொளியுடன்)

608
0
SHARE
Ad

satlinசென்னை – ‘கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்திருக்கிறோம். இனிமேல் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது எங்களுடைய பொறுப்பு என்று அனைத்து இடங்களிலும் நானே சொல்லி வந்திருக்கிறேன்’ என்று என்.டி.டி.வி ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திமுக பொருளார் மு.க.ஸ்டாலின்  கூறினார்.

என்டிடிவி தொலைகாட்சிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில்,  திமுகவின் திட்டங்கள், பலம் குறித்து பேசினார். நீங்கள் தவறு செய்துவிட்டதாக ஊழல் விவகாரத்தில் தொழிற்துறையினரிடம் சொன்னீர்கள்.

ஊழல் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. அதற்கு என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின்,  ” வளர்ச்சி… வளர்ச்சி…. ஊழல் இல்லாமல் ஒரு அரசாங்கம். நானே ஒவ்வொரு கூட்டத்திற்கும் சென்று, தெரிந்தோ, தெரியாமலேயோ அரசோ, எங்களுடையே கட்சிக்காரர்களோ தவறு செய்திருக்கலாம்.

#TamilSchoolmychoice

இனிமேல் தவறுகள் நடக்காமல் காத்துக் கொள்வது எங்களுடைய பொறுப்பு என்று நானே அனைத்து இடங்களிலும் சொல்லி வந்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.

ஸ்டாலின் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி: