Home Featured வணிகம் மலேசியா ஏர்லைன்ஸ் பணியாளர்களின் சீருடையில் புதிய மாற்றங்கள்!

மலேசியா ஏர்லைன்ஸ் பணியாளர்களின் சீருடையில் புதிய மாற்றங்கள்!

671
0
SHARE
Ad

Malaysia Airlinesகோலாலம்பூர் – தேசிய வானூர்தி நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் பெர்காட், பிரபல ஆடைவடிவமைப்பு நிறுவனமான ஃபாராகானுடன் இணைந்து, மாஸ் பணியாளர்களின் சீருடையில் புதிய வடிவங்களை உருவாக்கவுள்ளது.

விமானிகள், விமானப் பணியாளர்கள், விமான நிலையப் பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என மாஸ் விமான நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் புதிய சீருடை வடிவமைப்பை உருவாக்கவுள்ளார் ஃபாரா கான் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் ஆக்கப்பூர்வ இயக்குநர் டத்தோஸ்ரீ ஃபரா கான்.

மலேசியா ஏர்லைன்ஸ் சீருடைகள், குறிப்பாக கெபாயா, ஒரு அடையாளமாகவும், தலைமுறைகளுக்கும் மிகவும் பெருமை தரும் சின்னமாகவும் விளங்கி வருகின்றது என்று மலேசியா ஏர்லைன்ஸ் தலைமை வர்த்தக அதிகாரி பவுல் சைமன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இந்தக் கூட்டணியோடு, இன்னும் ஒரு படி மேலே சென்று, புதிய நாகரீகமான, செயல்பாட்டிற்குத் தேவையான வகையில் புதிய ஆடை வடிவமைப்பு உருவாக்கவுள்ளோம்” என்று நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பவுல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய ஆடை வடிவமைப்பும் மலேசியர்களுக்குப் பெருமை அளிக்கும் வகையில் அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.