Home இயக்கங்கள் தமிழகத்தின் விருதினைப் பெறுகிறது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் -உலகின் சிறந்த தமிழ் அமைப்பாகத் தேர்வு.

தமிழகத்தின் விருதினைப் பெறுகிறது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் -உலகின் சிறந்த தமிழ் அமைப்பாகத் தேர்வு.

744
0
SHARE
Ad

Rajendran-writers-assocகோலாலம்பூர், மார்ச் 17 – தற்போது உலகில் இயங்குகின்ற அமைப்புகளில், சிறந்த தமிழ் அமைப்பாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தேர்வு செய்யப்பட்டு,தமிழகத்தின் உயர்ந்த விருதினைப் பெறுகிறது.

இன்று, சென்னையில் நடைபெறவிருக்கும் திருக்குறள் தேசிய நூல் கோரிக்கை மாநாட்டின் ஓர் அங்கமான விருதளிப்பு விழாவில், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பாக அதன் தலைவர்.பெ. இராஜேந்திரன் (படம்) கலந்து கொண்டு இவ்விருதினைப் பெறுகிறார்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரிய ஜெயலலிதாவிற்கு நன்றி

#TamilSchoolmychoice

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் எனத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியத் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கவும்,  அத்தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி வலியுறுத்தவும், திருக்குறள் தேசிய நூல் கோரிக்கை மாநாடு சென்னை, அரசு அருங்காட்சியகத்தில் இன்று நடைபெறுகிறது.

அந்த மாநாட்டின் சிறப்பு அம்சமாகத்தான் தமிழ் அமைப்புகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தஞ்சாவூர் தமிழ்த் தாய் அறக்கட்டளை, உலகத் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து நடத்தவுள்ள  இத்திருக்குறள் கோரிக்கை மாநாட்டில் உலக அளவிலான விருதை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும், தேசிய அளவில் பெங்களூரு தமிழ் சங்கமும், தமிழகத்தில் திருப்பூர் தமிழ்ச் சங்கமும் விருதுகள் பெறுகின்றன.

இவ்விருதுகளை தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மு.இராசாராம் வழங்குவார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்குக் கிடைத்த இந்த விருது மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கக் கூடியதாகும்.