Home Featured இந்தியா ராகுல் காந்திக்கு காய்ச்சல்: நலம் விசாரித்தார் மோடி!

ராகுல் காந்திக்கு காய்ச்சல்: நலம் விசாரித்தார் மோடி!

582
0
SHARE
Ad

Rahul Gandhi-modiபுதுடெல்லி – காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விரைவில் குணமடையுமாறு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை கூறியிருப்பதாவது:

ராகுல் காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதை பிரதமர் நரேந்திர மோடி மூலமாகத் தெரிந்து கொண்டேன். ராகுல் காந்தியின் உடல்நலம் குறித்து மோடி கவலை தெரிவித்தார்.

அதையடுத்து ராகுல் காந்தியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் நலம் விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைய மோடி சார்பில் வாழ்த்து தெரிவித்தேன் என்று ஜே.பி.நட்டா குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

காய்ச்சல் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் 2 நாள்கள் பிரச்சாரப் பயணத்தை ராகுல் காந்தி கடந்த வாரம் ரத்து செய்தார்.

ராகுல் காந்தி வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்கச் சொல்லி அறிவுறுத்தியிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.